Wednesday, 21 March 2012

IPL - 5 ஐ.பி.எல்., துவக்க விழா


 

ஐ.பி.எல்., துவக்க விழா 

ஐ.பி.எல்., துவக்க விழாவில் அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி கேட்டி பெர்ரி அசத்த உள்ளார்.
ஐந்தாவது ஐ.பி.எல்., தொடர் வரும் ஏப்., 4ம் தேதி துவங்குகிறது. இதற்கு முன் ஏப்.,3ம் தேதி துவக்க விழா சென்னையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடக்கிறது. இதில் பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப் பச்சன், பிரியங்கா சோப்ரா, சல்மான் கான் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இவர்களுடன் அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி கேட்டி பெர்ரி கலந்து கொண்டு கலக்கவுள்ளார். 
இது பற்றி ஐ.பி.எல்., தலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில், பெர்ரி நிகழ்ச்சியை காண ஆவலுடன் காத்திருக்கிறோம். அவரின் பங்கேற்பு ஐ.பி.எல்., வீரர்கள், ரசிகர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்,என்றார்.

No comments:

Post a Comment