Wednesday, 14 March 2012

India Womens Cricket - இந்திய பெண்கள் கிரிக்கெட்




ஆமதாபாத்: ஆஸ்திரேலிய பெண்கள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய பெண்கள் அணி, 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா பெண்கள் அணி, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 5 டுவென்டி-20 போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி, நேற்று ஆமதாபாத்தில் நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, பேட்டிங் தேர்வு செய்தது.பீல்ட்ஸ் அபாரம்:ஆஸ்திரேலிய அணிக்கு ஹய்னேஸ் (41) நல்ல துவக்கம் தந்தார். பவுல்டன் (17), லீசா (19) நிலைக்கவில்லை. ஆஸ்போர்ன் (27), கேப்டன் பீல்ட்ஸ் (64) கைகொடுத்தனர். ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்தது.ஏமாற்றிய மிதாலி:சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு நாயக் (22), ராட் (36), சுமாரான துவக்கம் தந்தனர். கேப்டன் அஞ்சும் சோப்ரா (17) பெரிதாக சோபிக்கவில்லை. மிதாலி ராஜ் டக் அவுட்டானார். பின்வரிசையில் கோஸ்வாமி (33), மல்ஹோத்ரா (19) தவிர, மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. இந்திய அணி 50 ஓவரில் 197 ரன்களுக்கு 8 விக்கெட்டை இழந்து, 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

No comments:

Post a Comment