Tuesday, 13 March 2012

Dravid - way from and to

கிரிக்கெட் உலகின் கடவுள் அல்ல டிராவிட். மிகவும் சாதாரண வீரர் தான். ஆனாலும், கடின உழைப்பு மூலம் சாதனை சிகரங்களை எட்டினார். அனைத்துஅணிகளுக்கு எதிராகவும் ரன்மழை பொழிந்தார். இவரது இடத்தை இனி யாராலும் நிரப்புவது கடினம் என்ற அளவுக்குபுகழின் உச்சியை தொட்டார்.
இவரது ஓய்வு இந்திய அணியில் மிகப் பெரும் வெற்றிடத்தைஏற்படுத்தியுள்ளது. ம.பி.யில் உள்ள இந்தூரில் 1973, ஜன., 11 ம் தேதி பிறந்தார் டிராவிட். இவரது தந்தை ஜாம் உற்பத்தி செய்யும் கம்பெனியில் வேலை பார்த்தார். இதனால், செயின்ட் ஜோசப் பள்ளியில் படிக்கும் போது, சக மாணவர்கள் இவரை ஜாமி என்று அழைத்தனர்.இதுவே இவரது செல்லப் பெயராக மாறியது. 12 வயதிலேயே கிரிக்கெட்டில் கில்லாடியாக திகழ்ந்தார். பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த கோடை கால பயிற்சி முகாமின் போது இவரதுதிறமையை முன்னாள் வீரர் கேகி தாராபூர் கண்டறிந்தார்.பேட்டிங் தவிர, விக்கெட் கீப்பிங்கிலும் ஜொலித்தார். 1991ல் ரஞ்சி டிராபியில் அறிமுகமானார். 1996ல் இந்திய அணியில் இடம் பிடித்தார்.தனது பேட்டிங் திறமையை கிரிக்கெட் உலகின் அனைத்துதிசைகளிலும் நிரூபித்த இவர், டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளுக்கு எதிராக சதம் அடித்து அசத்தினார். டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களுக்கும்மேல் குவித்தார். டிராவிட் சொந்த வாழ்க்கைகுறித்த சுவாரஸ்யங்கள்...பூர்விகம்: இவரை கர்நாடகாவை சேர்ந்தவர் என்கின்றனர். உண்மையில் மகாராஷ்டிராவை பூர்விகமாக கொண்டவர்.பள்ளிப் படிப்பு: பெங்களூருவில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் படித்தார். அப்போது ஓட்டப்பந்தயம், ஹாக்கி விளையாட்டில்ஆர்வத்துடன் பங்கேற்றார்.கல்லூரி: செயின்ட் ஜோசப்கல்லூரியில் பி.காம் படித்தார்.பிடித்த உணவு: வீட்டில் சமைத்தது. குறிப்பாக மீன், சிக்கன் மற்றும் இத்தாலிய உணவு வகைகள்.குடும்பம்: மனைவி விஜிதா,டாக்டருக்கு படித்தவர். சமித்,அன்வெய் என இரண்டு மகன்கள்.பிடித்த வீரர்கள்: கபில் தேவ், கவாஸ்கர், விஸ்வநாத், பிரகாஷ் படுகோனே, ஆனந்த், பீட் சாம்ப்ராஸ், பெடரர்.பொழுதுபோக்கு: கி‌‌ஷோர் குமார், லதா மங்கேஷ்கர் பாடல்கள் கேட்பதும் டிவியில் ரக்பி,கால்பந்து போட்டிகள் பார்ப்பதும் பிடிக்கும்.

No comments:

Post a Comment