Tuesday, 13 March 2012

Dhoni's advice donot try to copy from seniors


சச்சின், டிராவிட் உள்ளிட்ட சீனியர்களின் ஆட்டத்தை காப்பி அடிக்க முயற்சித்தால், இளம் வீரர்களுக்கு மிகப் பெரும் நெருக்கடி ஏற்படும்,என, கேப்டன் தோனி எச்சரித்தார்.இந்திய அணியின் அனுபவ வீரரான டிராவிட், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார். பேட்டிங் வரிசையில், இவரது 3வது இடத்தை பிடிக்க இளம் நட்சத்திரங்களான விராத் கோஹ்லி, ரோகித் சர்மா, ரெய்னா, ரவிந்திர ஜடேஜா இடையே பலத்த போட்டி காணப்படுகிறது. இவர்களில், யார் அடுத்த டிராவிட் என்ற கேள்வி எழுந்தது.இது குறித்து இந்திய கேப்டன் தோனி கூறியது:இந்திய அணிக்காக 16 ஆண்டு காலம் விளையாடியவர் டிராவிட். கிரிக்கெட் அரங்கில் இவ்வளவு நீண்ட காலம் தாக்குப்பிடிப்பது பெரிய விஷயம். சவால்களை எதிர்கொள்ள அஞ்சாதவர். இக்கட்டான நேரத்தில் அணியை மீட்பதில் வல்லவர். கிரிக்கெட்டின் சிறந்த தூதராகவும், அடுத்த தலைமுறைக்கு நல்ல ரோல் மாடலாகவும் திகழ்ந்தார். வரும் போட்டிகளில் இவரை நிறையவே மிஸ் பண்ணுவோம்.கும்ளே, டிராவிட், கங்குலி, சச்சின், லட்சுமண், கங்குலி போன்ற சீனியர்களுக்கு நிகரான வீரரை கண்டறிவது கடினம். இவர்கள், கிரிக்கெட்டை மிகவும் ரசித்து விளையாடிய ஜாம்பவான்கள். இவர்களை போன்று இன்னொரு வீரர் உருவாக வாய்ப்பு இல்லை. ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதமான ஸ்டைல் இருக்கும். எனவே, அணியில் புதிதாக வரும் இளம் வீரர்கள், சீனியர்கள் இடத்தை பிடிக்கப் போகிறோம் என்று ஒருபோதும் நினைக்க கூடாது. ஒருவேளை அப்படி நினைத்தால், அவர்கள் மிகப் பெரும் நெருக்கடிக்கு தள்ளப்படுவர்.பொதுவாக ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்தன்மை இருக்கும். அதனை சரியாக வெளிப்படுத்தும் பட்சத்தில், அணியின் புதிய ஹீரோவாக உருவாகலாம். இன்னும் 10 அல்லது 12 ஆண்டுகளில் ஒரு வெற்றிகரமான இந்திய வீரர் உருவெடுக்கலாம். ஆனாலும், அவர் டிராவிட்டை போல் திறமையானவராக இருப்பார் என்று சொல்ல முடியாது. வீரர்கள் தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே எப்போதும் சிறந்தது.இவ்வாறு தோனி கூறினார்.

No comments:

Post a Comment