Tuesday, 13 March 2012

இந்திய கலாசாரம்: கிரெக் சாப்பல்

கிரெக் சாப்பல்.ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கிரெக் சாப்பல். இவர், இந்திய அணியின் பயிற்சியாளராக(2005-07) பணியாற்றிய காலத்தில் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பினார்.
முட்டாள்தனம்:தற்போது இந்திய அணி டெஸ்ட் அரங்கில் தொடர்ந்து தோல்வியை சந்திக்க, கொஞ்சம் ஓவராகவே விமர்சித்துள்ளார். கிரிக்கெட்டை கடந்து, இந்திய கலாசாரம் பற்றிய கிரெக் சாப்பலின் கருத்து முட்டாள்தனமானது. அடிலெய்டில், தனது புத்தக வெளியீட்டு விழாவில் கிரெக் சாப்பல் பேசியது:இந்திய வீரர்களுக்கு டெஸ்ட் போட்டிகளில் சுத்தமாக ஆர்வம் இல்லை. இது ஆஸ்திரேலிய தொடரில் அம்பலமானது. டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் கடினமாக உணர்கின்றனர்.
இவர்களை பொறுத்தவரை டுவென்டி-20 போட்டிகளில் நிறைய பணம் சம்பாதிக்கவே விரும்புகின்றனர்.பொதுவாக இந்தியர்களின் கலாசாரம் வித்தியாசமானது. இவர்களிடம் அணியாக செயல்படும் கலாசாரம் இல்லை. தலைமைப் பதவிக்கு என பிரத்யேகமாக பயிற்சி எதுவும் அளிக்கப்படாததால், அணியில் தலைமைப் பண்பில் சிறந்தவர்கள் இல்லை. சிறுவயதில், அவர்களது பெற்றோர் அனைத்து முடிவுகளையும் எடுக்கின்றனர். பின் பள்ளி ஆசிரியர்கள் முடிவு எடுக்கின்றனர். அடுத்து, அவர்களது பயிற்சியாளர்கள் முடிவு எடுக்கின்றனர்.
தோனி துணிச்சல்:இந்திய கலாசாரப்படி அடக்கி வாசிக்க வேண்டும். கொஞ்சம் தலையை உயர்த்தினாலும் கூட, யாராவது ஒருவர் புகுந்து தலையை எடுத்து விடுவர். இதனால் எந்த முடிவுகளுக்கும் பொறுப்பு ஏற்க தயங்குவர். தலை தாழ்ந்து நடக்க கற்றுக் கொண்டனர். இதற்கு கேப்டன் தோனி மட்டும் விதிவிலக்கு. துணிச்சலாக முடிவுகளை மேற்கொள்வார். ஓயாத கிரிக்கெட் போட்டி காரணமாக இவரும் பாதிக்கப்பட்டார். மூன்று விதமான போட்டிகளிலும் இவரே தலைமை ஏற்க வேண்டியுள்ளது. ஆஸ்திரேலியாவோடு ஒப்பிடுகையில் இந்திய அணி கூடுதலாக 50 சதவீத போட்டிகளில் பங்கேற்கிறது.சேவக்கின் கேப்டன் மோகம் இந்திய அணியில் பாதிப்பை ஏற்படுத்தியது. கும்ளேவுக்கு பின் தன்னை கேப்டனாக நியமிக்க வேண்டும் என விரும்பினார். இது நடக்காததால், அணியில் குழப்பங்கள் ஏற்பட்டன.இவ்வாறு கிரெக் சாப்பல் கூறினார்.

No comments:

Post a Comment